இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க?
Answer
If you don’t have any objection, may I sit here? என்பது அப்படியே தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பது. இது Asian variant or Indian variant என்று அழைக்கப்படும்.
ஆனால் ஒரு native English speaker கீழ்க்கண்டவாறு கேட்பார்:
Do you mind if I sit here?
Would you mind என்பது மிகவும் polite ஆக கேட்பது.
Would you mind உடன் past verb தான் உபயோகப்படுத்த வேண்டும்.
Would you mind if I sat here?
இதற்கு பாசிட்டிவாக பதில் கீழ்க்கண்டவாறு சொல்லலாம்.
No problem.
Be my guest.
Sure, go ahead.
இதற்கு நெகட்டிவாக”yes” என்று கூறலாம். அப்படி என்றால்”I don’t want you to do that. If you do it I will be unhappy.” என்று அர்த்தம்.
ஆதலால் native speakers நேரடியாக அப்படி கூற மாட்டார்கள். அதற்கு பதிலாக கீழ்க்கண்டவாறு கூறுவார்கள்.
I’m sorry, this seat is taken
I’m afraid, this seat is reserved.
Regards,
The Kanavu School of English
Kanavu.org
8838621831